மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மைய அலுவலகத்தில் (28-06-2022) மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பாளையங்கோட்டை சீனிவாசகம் நகர் ஏ.பி.காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில்.அளிக்கப்பட்ட மனுவில், தங்கள் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறுஞ்சாமல் அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைத்திட வழிவகை செய்திடவும், ஹரிஹரசுப்பிரமணியன் அளித்த மனுவில் டிவிஎஸ் நகர் பிள்ளையார்கோவிலின் தெற்கு பகுதியில் தெருவிளக்கு அமைத்து தரவும், 18வது மாமன்ற உறுப்பினர் மு.சுப்பிரமணியன் அவர்கள் அளித்த மனுவில் 18வது வார்டு ஜான்பாவா நகருக்கு கலைமாமணி ஜான்பாவா நகர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டியும்.
முகம்மது பயாஸ்கான் என்பவர் அளித்த மனுவில் மாற்றுதிறனாளியான தனக்கு மூன்று சக்கர வண்டி வழங்குமாறும், திருநெல்வேலி மாவட்ட மொத்த பூ கமிஷன் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் சந்திப்பு பேருந்து நிலையம் முதல் கெட்வெல் பூ மார்க்கெட் வழியே அரவிந்த் மருத்துவமனை வரையிலான சாலையை சரி செய்து மின்விளக்குகள், மற்றும் குப்பைகளை அகற்றிடவும், 51வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் தங்கள் பகுதிக்கு தார்சாலை அமைத்திடவும்.
அந்தோனிதுரை அளித்த மனுவில் மாற்று திறனாளியான தனக்கு சாலையோர இரவு உணவு கடை வைக்க அனுமதி வேண்டியும், 15வது வார்டு ரெங்கநாதபுரம் ஊர்பொது மக்கள் அளித்த மனுவில் மாநகராட்சி பொது கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் மற்றும் குளியல் அறை பழுதடைந்து உள்ளது அதனை சீரமைத்து தரவும், 31வது மாமன்ற உறுப்பினர் அமுதா அளித்த மனுவில் குலவணிகர்புரம் பாண்டிதுரை 1வது தெருவில் குடிநீரில் பாதாளச்சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதை தடுத்திடவும், சாலை மற்றும் மின் விளக்குகள் வசதிகள் செய்து தரவும்,.
தியாகராஜ நகர்பகுதியில் 4வது தெற்கு தெரு கடைசி பகுதியில் புதிய ஆழ்குழாய் அமைத்து மின்மோட்டார் - சின்டெக்ஸ் பொருத்தி குடிநீர் வசதி செய்து தர கேட்டும், சிதம்பரம்நகர் குடியிருப்போர் நல வாழ்வு ஆரோக்கிய சங்கத்தின் சார்பில் தச்சை மண்டலம் சிதம்பரம் நகரில் சீரான குடிநீர் வழங்க கேட்டும், அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், பாளை மண்டலம் முத்துசாமிபிள்ளை சந்து பகுதியில் அடிப்படை அத்தியாவசிய பணிகள் செய்து தரகோரியும், மேலப்பாளையம் மண்டலம் கிருஷ்ணாநகர், குறிஞ்சி நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா நகர் மக்கள் நல சங்கம் சார்பில் அப்பகுதியில் தார்சாலை அமைத்து தரவும் போன்ற மனுக்கள் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திட மேயர் பி.எம்.சரவணன் அறிவுறுத்தினார்.
இம்முகாமில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கதிஜா இக்லாம்பாசிலா, மாநகர் நல.அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், தச்சை உதவி ஆணையாளர் (பொ) லெனின், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் (பொ) ஐயப்பன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu