மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
மாற்றுத்திறனாளி ஒருவரிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்ட மேயர்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில், 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கந்தன் வண்ணார்பேட்டை பகுதியில் சென்னை சில்க்ஸ் முன்பும், சதன்ரோடுவைஸ் பக்கம் ஏற்கனவே இருந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் அதே இடத்தில் அமைத்திட கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனையடுத்து முதியோர் பென்சன் வழங்கிடவும், கூடுதல் குடும்ப ஓய்வூதியம் கேட்டும், சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் கேட்டும், பாளையங்கோட்டுர் வார்டு-8ல் பாளையங்கால்வாயில் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்திடவும், நெல்லை மாவட்ட சலவை தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், கருப்பன்துறையில் அமைந்துள்ள 2மற்றும் 3ம் தளத்தில் பழுதடைந்துள்ள படிகட்டுகளை சீர்திருத்தி அமைத்து தருமாறும், மாற்றுதிறனாளி ஒருவர் தனக்கு மாநகராட்சி எல்லைக்குள் ஆவின்பாலகம் ஒன்றினை அமைக்க அனுமதி அளித்திடவும் கோரிக்கை மனுக்களை பொதுக்கள் அளித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திட மேயர் பி.எம்.சரவணன் அறிவுறுத்தினார்.
இம்முகாமில் செயற்பொறியாளர் என்.நாராயணன், மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொ) லெனின், திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர் (பொ) பைஜூ, உதவி செயற்பொறியாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu