/* */

ஜூஸ் கடைகளில் தரமற்ற எலுமிச்சை! செக் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!

கரும்புச் சாறு உள்ளிட்ட குளிர்பானங்களில் தரமற்ற எலுமிச்சை பழங்களைப் பயன்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வந்ததையடுத்து திடீர் ரெய்டு அடித்தனர் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்.

HIGHLIGHTS

ஜூஸ் கடைகளில் தரமற்ற எலுமிச்சை! செக் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!
X

கரும்புச் சாறு உள்ளிட்ட குளிர்பானங்களில் தரமற்ற எலுமிச்சை பழங்களைப் பயன்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வந்ததையடுத்து திடீர் ரெய்டு அடித்தனர் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அடிக்கும் வெயிலில் அனைவரும் சுருண்டுவிடுவார்கள் போலிருக்கிறது. கொடூரமான தாக்குதலை சூரியன் தொடுப்பது போல அனைவரும் வெயிலை உணர்கின்றனர். வெளியில் சென்றால் மட்டுமல்ல வீட்டுக்குள்ளேயே இருந்தாலும்கூட அடிக்கும் வெயிலில் வீட்டின் சுவர்களும், தரையும் வெப்பத்தை உறிஞ்சி தந்தூரி அடுப்பைப் போல போக்கு காட்டி வருகிறது. எப்படி தப்பிப்பது என்று அவ்வப்போது சென்று கரும்புச் சாறு, கூழ், இளநீர் என குடித்து வருகின்றனர். இதில் கரும்புச்சாறு, எலுமிச்சைசாறு கொஞ்சம் விலை குறைவு என்பதால் அதனை மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதனையே பயன்படுத்தி சில கடைகாரர்கள் மக்களை ஏமாற்றி மோசமான பழங்களைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

முக்கியமாக கரும்புச் சாறு கடைகளில் இந்த தில்லுமுல்லு நடப்பதாக மாநகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சுகாதார குழுவினர் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.

சுமார் 81 கடைகளில் இந்த ஆய்வு அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் கொண்டு மக்களுக்கு ஜூஸ் தயாரித்து கொடுப்பது உறுதியானது. இதனால் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

6800 ரூ அபராதமும் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் விடப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே கடை நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறிச்சென்றார்கள். மேலும் தடையை மீறி பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 17 May 2023 12:01 PM GMT

Related News