தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
நெல்லை கால்வாய்க்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார் சாகுபடிக்கு தண்ணீர் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், அணையில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் ஜூன் 1ஆம் தேதி விவசாயத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நல்ல மழை பெய்ததால் அணைகள் அனைத்தும் நிரம்பின. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு கடந்த 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தாமிரபரணி நதியில் சுத்தமல்லி அணையில் இருந்து திருநெல்வேலி கால்வாய்க்கு தண்ணீரை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது :-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 130 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் 4,168 ஏக்கர் விளை நிலங்கள் யபாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் சிக்கனமாக அந்த நீரை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கினர்.
#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #திருநெல்வேலி #தாமிரபரணி #ஆறு #சுத்தமல்லி #அணை #தண்ணீர் #திறப்பு #நெல்லை #கால்வாய்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu