பழையபேட்டையில் அடிப்படை வசதிகள் குறித்து நெல்லை மேயர் சரவணன் ஆய்வு

பழையபேட்டையில்  அடிப்படை வசதிகள் குறித்து நெல்லை மேயர்  சரவணன் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி வார்டு 16 பழைய பேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

பழையபேட்டை 16 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க மேயர் சரவணன் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாநகராட்சி வார்டு 16 பழைய பேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண் 16 பழைய பேட்டை பகுதிகளில் அழகப்பபுரம் நடுத்தெரு , அனவரத சுந்தர விநாயகர் தெற்குத்தெரு, சமூக ரெங்கபுரம் கீழ் தெரு, ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது அழகப்பபுரம் நடுத்தெரு , அனவரத சுந்தர விநாயகர் தெற்குத்தெரு, சமூக ரெங்கபுரம் கீழ தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ளவும், பழுதாகி உள்ள அடிபம்பு மற்றும் குடிநீர் பொது குழாய் தரைமட்டமாக உள்ளதை சரி செய்யவும், தெருக்களில் தேங்கும் குப்பைகளை தினமும் தூய்மைப்பணியாளர்கள் மூலம் அகற்றிடவும், அழகப்பபுரம் நடுத்தெருவில், கோவில் அருகில் உள்ள அடிபம்பு மற்றும் பொதுக்குடிநீர் குழாய் உடனடியாக சரிசெய்யவும், கழிவுநீர் ஓடை சுத்தம் செய்யவும், கழிவுநீர் ஓடையின் மீது சிறுபாலம் அமைக்கவும், மேற்படி தெருவில் ஒரு போர்வெல் போட்டு அடிபம்பு அமைக்கவும் அறிவுறுத்தினார். புதை சாக்கடை குழாய் இணைப்புகள் அமைத்திடவும், பயனற்ற நிலையில் உள்ள அடிபம்பை மாற்றி புதியதாக அடிபம்பு அமைத்து தரவும் மேற்கண்ட வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர் ஆய்வாளர் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர் (பொ) பைஜூ, இளநிலை பெறியாளாகள் ஐயப்பன், முருகன். சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

.

Tags

Next Story