நெல்லை ஆலயங்களில் வழிபாடு கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அனைத்து இந்து ஆலயங்களையும் திறந்து வழிபாடு செய்ய . அரசு உத்தரவு விடக்கோரி இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருநெல்வேலி:

தமிழகத்திலுள்ள அனைத்து இந்து ஆலயங்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியின் பேரியக்கம் சார்பில் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லையப்பர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ஆலயங்கள் முன்பும் இந்து முன்னணி பேரியக்கம் இந்து மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தளர்வுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு எல்லாமே திறந்த நிலையில் கோவில்கள் மட்டும் பூட்டி கிடைப்பது மிகுந்த வேதனைக்குரியது. மக்கள் துன்பப்பட்டு இருக்கின்ற இந்த காலத்தில் "நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன்" என்று .சொன்னார்கள். மக்கள் தங்கள் துன்பங்களை எல்லாம் சொல்வதற்கு கோவிலுக்குக் கூட இன்றைக்கு செல்ல முடியாத நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. இன்றைக்கு தமிழக அரசு தரவுகளை அறிவிக்கின்ற பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக இந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறினார்.

Tags

Next Story
ai healthcare technology