/* */

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள் பங்கேற்பு
X

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, மானூர் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக வாக்குச் சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம், வேட்பாளர்கள், முகவர்கள், முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஊராட்சி மன்றங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக வாக்குப் பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டு வாக்கு எண்ணும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் தபால் வாக்குகள் அடங்கிய பெட்டி சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து வாக்கு பெட்டிகளும் சீல் அவிழ்க்கப்பட்டு வாக்குகள் பிரித்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரை மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என பதவிகள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைத்து எண்ணப்படுகிறது. நான்கு பதவிகளுக்கும், நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் உள்ளன. ஒன்பது ஒன்றியங்களுக்கும் தலா ஒரு மையம் என மொத்தம் ஒன்பது வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வாக்கு சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 2917 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 9 வாக்கு எண்ணும் மையங்களிலும் மொத்தம் 675 மேஜைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் 12 பேர், ஒன்றிய கவுன்சிலர்கள் 122, பேர் ஊராட்சி தலைவர்கள் 204 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் 1731 பேர் என மொத்தம் 2069 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேகமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. மொத்தம் 5522 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வெற்றி பெரும் வேட்பாளர்கள் விரைவில் தங்கள் போட்டியிட்ட பதவிக்கான பொறுப்பு ஏற்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் ஒருவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஒருவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் 9 பேர், துணைத் தலைவர் பதவிக்கு 9 பேர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 204 பேர் என மொத்தம் 224 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்சினைகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களின் வெற்றியை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் தான் அரசியல் கட்சி சின்னங்கள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியுள்ளனர். எனவே அந்த இரண்டு பதவிகளுக்கும் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...