/* */

திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

முஸ்லிம் அனாதை நிலையத்தில் திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

திருநெல்வேலி  ரோட்டரி கிளப் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி
X

திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லிம் அனாதை இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெசிந்தா தர்மா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் அலெக்சாண்டர் மனுவேல் தொடக்க உரையாற்றினார். முஸ்லிம் அனாதை நிலையம் தலைவர் ஜனாப் எம் கே எம் கபீர், செயலாளர் எம் கே எம் சாபின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஜங்ஷன் ஜும்மா பள்ளிவாசல் துணைத்தலைவர் ஜனாப் எம் ஏ நசீர் நோன்பின் மாண்பு குறித்து பேசினார்.

திருநெல்வேலி ரோட்டரி கழக தலைவர் எஸ் எஸ் ஷங்கர், செயலாளர் அந்தோ ஜோ செல்வக்குமார், உதவி ஆளுநர் வாசு, முன்னாள் தலைவர் ரமணி, சர்வசமய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், எம்.ஓ.சி.பொருளாளர். ஜனாப். ஆரிப் சுல்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக பள்ளிவாசல் இமாம் நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தினார்கள். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெசிந்தா தர்மா அவர்களுக்கு எம்.ஓ.சி.தலைவர் எம்.கே.எம்.கபீர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நோன்பு திறப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி டாக்டர் கிரீஸ் தீபக் ,டாக்டர் ஜான்சன் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 3 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!