சீவலப்பேரி கோவிலில் புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு பூச்சொரிதல்
சுடலைமாடசாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்ற போது எடுத்த படம்.
சீவலப்போி ஸ்ரீசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் புரட்டாசி பெளா்ணமியை முன்னிட்டு ருத்ர ஜெபம் வசுத்ரா ஹோமம் மற்றும் பூச்சொாிதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் இருக்கின்றது. மேலும் குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை 'கொடை விழா' என்கிற பெயரில் சிறப்பாக நடத்தப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோவிலில் ஸ்ரீ சுடலைமாடன் மற்றும் பெண்தெய்வங்களான ஸ்ரீ பிரம்மசக்தி ஸ்ரீ பேச்சிஅம்மன் ஆகியோிடன் அருள்பாலி்த்து வருகின்றாா்.
இக்கோவிலில் சுவாமிக்கு சைவ உணவுகளே பெரும்பாலும் நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. கொடை விழாவின்போது மட்டும் அசைவ உணவுகள் படையல் இடுகின்றனா். புரட்டாசி பெளா்ணமியை முன்னிட்டு ருத்ர அம்சமான சுடலைக்கு ருத்ர ஜெபம் ஹோமம் நடைபெற்றது. முன்னதாக சுடலை மாடசுவாமியிடம் அனுமதி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து ஜெப பாராயணம் ஹோமம் நடைபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னா் சுடலை மாடனுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து மகா கும்ப அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீசுடலைமாடன் பேச்சிஅம்மன் பிரம்மசக்தி ஆகியோருக்கு வாசனை பூக்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நிறைவாக கோபுர ஆரத்தி நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சுடலை மாட சுவாமி கோவிலில் ருத்ர ஜெபம் ஹோமம் புஷ்பாஞ்சலி நடைபெற்றதை மக்கள் ஆச்சாியமாகவும் ஆா்வத்துடனும் கண்டு வணங்கி மகிழ்ந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu