நெல்லை:கொலை வழக்கில் ஈடுபட்ட 5 நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
நெல்லை, ராஜவல்லிபுரத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பட்டன் என்பவரின் மகன் கந்தன் (19), பரமசிவன் என்பவரது மகன் முருகன் என்ற முருககுட்டி (18), துரை என்பவரது மகன் சுரேஷ் என்ற சூசை (18), முத்தையா என்ற ராஜ் என்பவரின் மகன் விஜய் (18), மற்றும் பேச்சிமுத்து என்பவரது மகன் சங்கர் என்ற கோமதிசங்கர்(18) ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு தெரியவந்தது.
குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க நெல்லை ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா அறிவுறுத்தியதன் பேரில் 5 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu