ஒமிக்ரான் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் -விமன் இந்தியா மூமென்ட்

ஒமிக்ரான் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் -விமன் இந்தியா மூமென்ட்
X
ஒமிக்ரான் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். - விமன் இந்தியா மூமென்ட்

ஒமிக்ரான் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். விமன் இந்தியா மூமென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூமென்ட் சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா தலைமை தாங்கினார், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் கனி, வர்த்தகர் அணி மாநகர் மாவட்ட தலைவர் சிட்டி சேக் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் ஐந்து மாதபணிகள் குறித்து மீளாய்வு நடைபெற்றது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒமிக்ரான் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும், தெருக்களில் சுற்றி வரும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், புல்லிபாய், சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர்களை காவல்துறை கண்டறிந்து அவர்களை ஒடுக்க வேண்டும், தவறினால் இந்திய குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உட்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் ஒற்றைக் கோரிக்கை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளாக பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் யாஸ்மின்,செயற்குழு உறுப்பினர்கள் பர்வீன் பானு, சுகராள்பானு ,அனீஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் நூர் நிஷா நன்றி உரை ஆற்றினார்.

Tags

Next Story
ai in future agriculture