பேருந்தில் லேப்டாப் திருடிய "டிப்டாப் ஆசாமி" : வைரலாகும் சிசிடிவி கேமரா காட்சி

பேருந்தில் லேப்டாப் திருடிய டிப்டாப் ஆசாமி :  வைரலாகும் சிசிடிவி கேமரா காட்சி
X

நெல்லையில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்தில் பயணியின் லேப்டாப்பை திருடும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் லேப்டாப் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சியால் பரபரப்பு.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று தூத்துக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் துாத்துக்குடிக்கு பயணம் செய்த நபர் ஒருவர் தனது லேப்டாப் மற்றும் உடமைகளை இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் அவரை நோட்டமிட்டு லேப்டாப் பையை மட்டும் திருடி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி சென்றுவிட்டார். இது தெரியாமல் பேருந்தில் பயணம் செய்த நபர் தூத்துக்குடியில் இறங்கும்போது தனது லேப்டாப் பையை தேடிய பாேது காணாமல் பாேனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாேலீசார் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். பின்னர் நெல்லை பெருமாள்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லேப்டாப் திருடிய டிப்டாப் ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த காட்சிகள் மூலமாக பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை இந்த சிசிடிவி காட்சிகள் உணர்த்தியிருக்கிறது. தற்பாேது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story