மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு: பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டி

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு:  பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டி
X

சங்கர் நகரில், இந்திய அரசின் நேரு யுவகேந்திரா நடத்திய பாரதி நினைவு நூற்றாண்டு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி பரிசுகளை வழங்கினார்.

மகாகவி பாரதி நூற்றாண்டு நினைவையொட்டி, நெல்லை சங்கர் நகர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பாரதி பிறந்த நெல்லை மாவட்டத்தில இந்திய அரசு நேரு யுவகேந்திரா, நல்லதை பகிர்வது நம் கடமை (NPNK) மற்றும் பாரதியார் உலக பொது சேவை நிதியம் ஆகிய அமைப்புகள் இணைந்து "தேச விடுதலையில் பாரதியின் பங்கு" என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கட்டுரை போட்டிகளை, சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியருக்கு நடத்தின.

இப்போட்டிகளை, சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உ.கணேசன் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆ. ரங்கநாதன் ஆகியோர் நடத்தினர். இந்த போட்டிகளுக்கு நடுவராக, ஆசிரியர் பிரேமா மற்றும் ஆசிரியர் ஜெகதீஸ்வரி இருந்து, சிறப்பாக பங்கெடுத்த மாணவர்களில் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

இதில் கலந்து கொண்டு பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ- மாணவியருக்கு, பரிசுகளை நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ.பழனி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முனைவர் கணபதி சுப்ரமணியன், பாரதியின் தமிழ் சேவை என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். NPNK குழு ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா நன்றியுரை கூறினார். முன்னதாக நேரு யுவகேந்திரவின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் வரவேற்புரை ஆற்றி விழா ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா தன்னார்வலர் மாரியப்பன் செய்திருந்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil