பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி பழைய பேட்டையில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி பல்வேறு குடிசைத் தொழில்களுக்கும் சிறுகுறு தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்கி வரும் நகரமாகும். இங்கு பல்வேறு தொழில்களைப் போல பாத்திரத் தொழிலும் மிகவும் முக்கியமான தொழிலாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி பழைய பேட்டை பகுதியில் பாத்திர தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் கூலி உயர்வைத் தராமல் காலம் தாழ்த்தும் பாத்திர உற்பத்தியாளர்களைக் கண்டித்தும் போலியான தொழிலாளர்கள் சங்கத்தின் மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சி ஐ டி யூ மாவட்ட பொருளாளர் தலைமை தாங்கினார். பேட்டை பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க தலைவர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். துணைத் தலைவர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!