நெல்லையில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லையில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் சைக்கிளில் பேரணியில் பங்கேற்றார்

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு மாணவர்களுடன் சைக்கிளில் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு எற்படுத்தினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். இப்பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு மாணவர்களுடன் சைக்கிள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு எற்படுத்தினார்.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது மேலும் கல்லூரியின் முதுகலை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சைக்கிளில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இப்பேரணி கல்லூரியில் தொடங்கி நீதிமன்றம் வழியாக கேடிசி நகர் மேம்பாலம் வரை அனைவரும் பேரணியாக சென்று பின்னர் மீண்டும் அங்கிருந்து கல்லூரி வரை சைக்கிளில் பேரணியாக வந்தனர். இப்பேரணியில் சேவியர் கல்லூரி முதல்வர் ஜெரோம் ரெக்டர் மரியதாஸ், நெல்லை ஹ_ண்டாய் ஷோரூம் அதிகாரி திரு. ஹரி பிரதான் மற்றும் ஐன்ஸ்டீன் கல்லூரி நிர்வாகி திரு. எழில்வாணன் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture