நெல்லையில் நாளை அண்ணா பிறந்தநாள்: அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

நெல்லையில் நாளை அண்ணா பிறந்தநாள்: அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு
X
அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு.

அண்ணா பிறந்தநாள் அதிமுக மாவட்டச் செயலாளர் தசை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை.

அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:- முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி நாளை செப்டம்பர் 15 காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள். இந்நாள் நாடாளுமன்ற பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பங்கேற்கின்றனர்.

எனவே அதிமுக அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்டம், கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!