நெல்லையில் திமுக அரசை கண்டித்து வரும் 28ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திமுக அரசை கண்டித்து வரும் 28ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

நெல்லையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்த திமுக அரசை கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் வரும் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி,வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!