நெல்லை: ஆடி 18ஆம் பெருக்கு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசை படைத்து வழிபாடு

நெல்லை: ஆடி 18ஆம் பெருக்கு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசை படைத்து வழிபாடு
X
ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசைகள் படைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு நெல்லை தைப்பூச மண்டப படித்துறையில் தாமிரபரணி நதிக்கு 108 வகையான சீர் வரிசை படைத்து வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி 18 ம் பெருக்கு அன்று நதிகளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பு சார்பில் தாமிரபரணி அன்னைக்கு ஆடிசீர் திருவிழா நடத்தப்பட்டது.நெல்லை மீனாட்சிபுரம் சாராதா பீட மண்டபத்தில் வைத்து 108 வகையான சீர் வரிசைகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தைப்பூச படித்துறையில் வைத்து பஜனையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதனை தொடர்ந்து 18 வகையான அபிசேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும், அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மஹாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் 108 பெண்கள் தாம்புலங்களில் எடுத்து வரப்பட்ட தங்கம்,வெள்ளி, நாணயங்கல், பூ ,பழம், மஞ்சள், தேங்காய், நவதானியம், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட 108 வகையான சீர்வரிசைகளை நதியில் இட்டு வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வெற்றிலை, பாக்கு, இனிப்புடன் தாம்பூலும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!