முன்விரோதம் காரணமாக அவதூறாகப் பேசிய 2 பேர் கைது
பைல் படம்
சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
நெல்லை மாவட்டம், வடக்கு வாகைகுளம், அம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த இசக்கிராஜா (25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மானூர் காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச்சென்ற எதிரி இசக்கிராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி, அலுவலக கண்ணாடியை சேதப்படுத்திய இருவர் கைது
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி, செல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி மைக்கேல் ஜான்சன்(26) சேரன்மகாதேவி - அம்பை ரோட்டில் அலுவலகம் அமைத்து பில்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார்.இவர் அப்பகுதியில் அதிகமான வீடுகளை கட்டி வருவதாகவும் இதனால் சேரன்மகாதேவியை சேர்ந்த ஜான் சேவியர் ஜெபஸ்டின்(36), வளன்அரசு ரெத்திஷ்(40) இருவரும் அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்கள்.
அந்தோணி மைக்கேல் பணம் கொடுக்காத காரணத்தால் இதனை மனதில் வைத்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்திற்கு சென்று அவரை அவதூறாக பேசி அலுவலகத்தில் கல்லை கொண்டு எரிந்து கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அந்தோணி மைக்கேல் ஜான்சன், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உதவி ஆய்வாளர் பிரைட் பிளசிங் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்தோணி மைக்கில் ஜான்சனை மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்தார்.
பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது
நெல்லை மாவட்டம், தாழையூத்து வஉசி நகரை சேர்ந்த ஆனந்தி(23), என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உறவினரை பார்க்க வேண்டி பேருந்துக்காக வஉசி நகர் பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்தார். அப்போது தாழையூத்தை சேர்ந்த இசக்கிமுத்து(22) என்பவர் எதிரே உள்ள கடையில் நின்று பெண்ணிடம் சைகையில் போன் நம்பரை கேட்டாராம். அதற்கு ஆனந்தி அவரை கோபமாக பேசி திட்டியுள்ளார், இதனால் அந்த இளைஞர் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆனந்தி, தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குபதிவு செய்து பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இசக்கிமுத்துவை கைது செய்தார்.
அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது
தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தாழையூத்து, அன்னை வேளாங்கன்னி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சுதா(22) என்பவரும் அவருடைய கணவர் இசக்கிமுத்துவும் நேற்று முன்தினம் வி.ஓ.சி நகர் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருக்கும்போது அதே இடத்தில் தாழையூத்து, வி.ஓ.சி நகரை சேர்ந்த உமா லட்சுமணன்(24) என்பவரின் மனைவி நின்று கொண்டிருந்தவரிடம் செய்கையில் தொலைபேசி எண்ணை கேட்டதாகவும் அதற்கு அவர் சத்தம் போட்டுள்ளார். இதன் காரணமாக உமா லட்சுமணன் சுதாவின் கணவரான இசக்கிமுத்துவிடம் என் மனைவியிடம் போன் நம்பர் எப்படி கேட்கலாம் என கூறி அவதூறாக பேசி கையால் கன்னத்தில் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுதா தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உமா லட்சுமணனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu