நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஐந்தாவது கட்டமாக ஆக்சிஜன் வழங்கல்.

நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஐந்தாவது கட்டமாக ஆக்சிஜன் வழங்கல்.
X

மகேந்திரகிரியில் இருந்து புறப்பட்ட ஆக்ஸிஜன் கண்டெய்னர் லாரி.

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன்.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஐந்தாவது கட்டமாக 4000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் வழங்கபட்டது.

நெல்லை மாவட்டத்தில் கொரனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மாவட்டத்தில் தற்போது சராசரியாக நாள்தோறும் 600 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் முக்கிய சிகிச்சை மையமான நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்ட படுக்கைகளில் கொரனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.

கடந்த வாரம் இங்கு கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பல்வேறு வகைகளில் ஆக்சிஜன் கிடைக்க மாவட்ட ஆட்சியர் முயற்சி மேற்கொண்டார் அந்த வகையில் மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம் சென்னை, தஞ்சாவூர், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய இடங்களில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டது.


இதைத் தவிர பல்வேறு தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினர் . இறுதியாக ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழக அரசு ஏற்பாட்டில் 14 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் நேற்று முன்தினம் நெல்லை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த ஆக்சிஜன் தீர்ந்து வரும் சூழ்நிலையில் அடுத்தகட்ட தேவையை பூர்த்தி செய்ய தற்போது மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்திலிருந்து மேலும் 4000 கிலோ மீட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் நெல்லை அரசு மருத்துமனைக்கு கொண்டுவரப்பட்டது பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.

ஏற்கனவே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நான்கு கட்டங்களாக மொத்தம் 21000 கி.லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு ஐந்தாவது கட்டமாக 4,000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings