பெற்றோருக்கு, மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு

பெற்றோருக்கு, மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு
X

திருநெல்வேலி காமராஜர் மேனிலைப்பள்ளி மாணவர்கள் கடிதம் மூலம் பெற்றோர்க்கு நூதன தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி தேர்தல் விழிப்புணர்வு குழுவின் சார்பாக 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் பெற்றோருக்கு கடிதம் எழுதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொ) ஜெபஜான்சன் சாந்தகுமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் மேலும் வாக்குப்பதிவு நாளன்று தனிமனித இடைவெளியையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!