வாக்குச்சாவடி அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு

வாக்குச்சாவடி அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு
X

திருநெல்வேலியில் தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டமன்ற பொதுதேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப் 6 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஷ்ணு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களை கம்ப்யூட்டர் மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணிகளை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டார்.உடன் டிஆர்ஓ., பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!