சேவை புரிந்த பெண்களுக்கு ரோட்டரி விருது வழங்கியது

சேவை புரிந்த பெண்களுக்கு   ரோட்டரி   விருது வழங்கியது
X

திருநெல்வேலி ரோட்டரி சங்கம் சார்பில் சமூகத்திற்கு சேவை புரிந்த பெண்களுக்கு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த சேவையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் செயலாளர் விஜய் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் பரமசிவன், மெல்கியோ, சங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி, டாக்டர் காஞ்சனா சுரேஷ், டாக்டர் பிரான்ஸிஸ்கா ஆகியோருக்கு சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அன்டோ ஜோ செல்வகுமார், ரமணி, சொக்கலிங்கம், குணசீலன், கமாக் புகழேந்திரன், முரளிதரன் மற்றும் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story