திருநெல்வேலியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருநெல்வேலியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
X

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூய யோவான் கல்லூரி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை உரையாற்றினார்.

ஆவின் சேர்மன் சுதா பரமசிவன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், தூய யோவான் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி வேதநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் முன்னாள் எம்பி., விஜிலா சத்தியானந்த், சௌந்தரராஜன், மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, செந்தில், ஆறுமுகம், ராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!