தமிழக முதல்வரை சந்தித்து பேசிய சிறுவர்கள்

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய சிறுவர்கள்
X

திருநெல்வேலியில் தன்னை சந்தித்த சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, களக்காடு பகுதியை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் சந்தித்து, தமிழக அரசு தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சைக்கிள்கள், லேப்டாப்கள் ஆகியவை வழங்கியதாகவும், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ 2500, அரிசி, வெல்லம் மற்றும் முழு கரும்பு ஆகியவற்றினை வழங்கியதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நன்றி தெரிவித்த சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!