நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
X
நெல்லை மாவட்ட மைய நூலகத்தில், புத்தாண்டு புத்தகக் கண்காட்சியானது இன்று தொடங்கி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நன்கு நாட்கள் நடைபெறும்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், வாசகர்வட்டம் ,தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து புத்தாண்டில் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியை தொடங்கியது.

பாளையங்கோட்டை மைய நூலகத்தில் இன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது இரண்டாம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் வருகிறது, இப்புத்தக கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் திறந்து வைத்தார்.

இதில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத சலுகை விலையில் வழங்கப்பட உள்ளது, புத்தகங்கள் வாங்கும் வாசகர்களில் தினந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது, பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என்று சிறப்பு நிகழ்வுகள் மாலை நேரங்களில் நடைபெறுகிறது.

புத்தகங்களோடு புத்தாண்டு கண்காட்சியானது தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசகர்கள், பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு கண்காட்சியில் பங்கு பெற்று புத்தகங்கள் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட நூலக அலுவலர் வயலட் கேட்டுக் கொண்டு உள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை, துணைத்தலைவர். முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் சு.தம்பான், அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன் , மையநூலகர் இரா. முத்துலட்சுமி, ஒருங்கிணைப்பாளர்கள் நல்நூலகர் முனைவர்.முத்துகிருஷ்ணன், முத்துசுவாமி ,தேசிய வாசிப்பு இயக்கப் பொருளாளர் அ.பாலாஜி உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!