நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்

திருநெல்வேலி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திமுக தலைமைக்கு அனுப்பியிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அவர் மீது பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். இவர்களில் திமுக கவுன்சிலர்களும் அடக்கம். இதனால் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பணிகள் சரிவர நடக்காமல் தேங்கி நிற்பதாக தலைமைக்கு தொடர்ந்து புகார் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த முறை கூடிய மாமன்ற கூட்டத்திலும் திமுக கவுன்சிலர்களே மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் தெரிவித்தது உட்கட்சியிலேயே பெரிய விசயமாக பேசப்பட்டு வந்தது.

இதுமட்டுமின்றி சுதந்திர தின விழாவிலும் திமுக கவுன்சிலர்கள் மேயரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதுபோல நிறைய விசயங்கள் நடந்துகொண்டே இருந்த நிலையில், இப்போது மேயர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 45 திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை திமுக தலைமைக்கு அனுப்பியிருக்கின்றனர். இந்த விசயம் புகைந்து வந்த நிலையில், திமுக தலைமை அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மும்பை சென்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் சென்னை திரும்பிய பிறகு இதுகுறித்த முடிவு எடுப்பார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!