/* */

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிச. 9 இல் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிச. 9 இல் வேலைவாய்ப்பு முகாம்
X

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். (கோப்பு படம்).

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், தொழில்நுட்பம் என 24 துறைகள் செயல்பட்டு வருகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் 102 கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் உளள 24 துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயலும் மாணவர்களுக்கு பருவத் தோர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் பல்கலைக்கழகத்தால் நிர்யணம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும். மேலும், பல்கலைக்கழகம் சார்பில், பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படுவது உண்டும்.

அந்த வகையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி- சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கிப் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 9.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மைய அதிகாரிகள் சுந்தரராமன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கிக்கு வாடிக்கையாளர் உறவு மேலாளர் (Relationship Manager) பணிக்கு தகுதியுள்ள பட்டதாரி மாணவர்களை (ஆண் மற்றும் பெண் இருபாலரையும்) தேர்ந்தெடுப்பதற்கான வளாக வேலை வாய்ப்பு முகாம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சுந்தரனார் அரங்கில் 9.12.2022 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள் 2019 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலமாக 21 நாள் இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுப் பின்னர் ஐசிஐசிஐ வங்கி பணிக்கு அமர்த்தப்படுவர். அந்தப் பயிற்சிக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டண தொகையை டிவிஎஸ் நிறுவனம் வங்கிகள் மூலமாக தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். தவணைத் தொகையை வங்கிப் பணிக்கு சென்ற பின் செலுத்தினால் போதுமானது.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவரக்குறிப்பு தகவலைப் பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும் பொழுது சுயபதிவேடு (Bio-data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் பல்கலைக்கழக அபிஷேகப்பட்டி வளாகத்திற்குக் காலை 9.30 மணி அளவில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Dec 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?