திருநெல்வேலி-மணிமண்டபங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆய்வு

திருநெல்வேலி-மணிமண்டபங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆய்வு
X
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் நபார்வையிட்டு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் .வீ.ப.ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் 52 இலட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் கழிப்பிட கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இப்பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டி வீரன் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பாகவும், மணிமண்டபத்தில் காலி இடங்களில் பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்துவதற்கும் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மண்டபத்தை புணரமைக்கப்பட்டு வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒளி,ஒலி காட்சிமையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


அதற்கான இடம் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மணிமண்டபத்தில் அரசு போட்டித் தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களிடம் மணி மண்டபத்திற்கும் போட்டித்தேர்வுக்காக பயிற்சி பெறுவதற்கு அடிப்படை தேவைகள் ஏதாவது ஏற்படுத்தப்பட வேண்டுமா என கேட்டறிந்தார். மேலும் மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுகக் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி , தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story