SSLC Exam Results நெல்லை மாவட்டத்தில் 94.19 சதவிகித தேர்ச்சி!

SSLC Exam Results நெல்லை மாவட்டத்தில் 94.19 சதவிகித தேர்ச்சி!
X
தமிழக அளவில் திருநெல்வேலி மாவட்டம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 29வது இடத்தில் இருந்தது. தற்போது 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

தமிழகத்தில் எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 94.19 சதவிகிதம் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ் எஸ் எல் சி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 126 மாணவர்களும் 11 ஆயிரத்து 274 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 91.28 சதவிகிதம் ஆகும். மாணவிகள் மொத்தம் 10 ஆயிரத்து 942 பேர் தேர்வாகியுள்ளனர். இது 97.06 சதவிகிதம் ஆகும். மொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 98 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.19 சதவிகிதம் ஆகும்.

தமிழக அளவில் திருநெல்வேலி மாவட்டம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 29வது இடத்தில் இருந்தது. தற்போது 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதுபோல தென்காசி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 303 மாணவர்களும், 9 ஆயிரத்து 357 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தமாக தேர்வு எழுதிய 18 ஆயிரத்து 660 மாணவர்களில் 8 ஆயிரத்து 521 மாணவர்கள், 9 ஆயிரத்து 1 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 94.12 சதவிகிதமாகும். தென்காசி மாவட்டம் தமிழக அளவில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவே தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 95.58 சதவிகித தேர்ச்சியைப் பெற்று தமிழக அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!