பொதுமக்கள் குறைகள் குறித்த புகார்- ஒருவார காலத்திற்குள் தீர்வு -மாநகராட்சி ஆணையாளர்
மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன்
பொதுமக்கள் கோரும் சிறிய அடிப்படைத் தேவைகளை மண்டல உதவி ஆணையாளர்கள் 'ஒருவார காலத்திற்குள்" நிறைவு செய்திட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் கோரிக்கைகள் மற்றும் நகர்புற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, பொதுமக்களுடனான "காணொளிக் காட்சி" மூலமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பொதுமக்களுடனான 'காணொளிக் காட்சி" கலந்துரையாடலில் மாநகராட்சி ஆணையாளருடன் பத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முதன்முதலாக கோரிக்கைகள் மற்றும் நகர்புற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடனான 'காணொளிக் காட்சி" நிகழ்வில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நடைமுறைப்படுத்த உள்ள காணொளிக் காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூடுதலாக பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்நிகழ்வின் வாயிலாக இன்று பெறப்பட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மாநகரின் அடிப்படை சிறிய பிரச்சனைகளை நிறைவேற்றுவதை இலக்கீடாக கவனத்தில் எடுத்துக் கொண்டு 4 மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையின் கீழ், அடுத்த 1-வார காலத்திற்குள் பணிகளை முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்பணிகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுவதன் மூலம் அடுத்து வரும் காலங்களில் வளர்ச்சிப்பணிகள் மீது தொடர் கவனம் செலுத்த வேண்டுமென அலுவலர்களை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினார். இந்த காணொளிக் காட்சி கலந்துரையாடல் நிகழ்வில் மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu