தமிழக அரசின் அலங்கார ஊர்தி திருநெல்வேலி வந்தது: மலர் தூவி வரவேற்றனர்

தமிழக அரசின் அலங்கார ஊர்தி திருநெல்வேலி வந்தது: மலர் தூவி வரவேற்றனர்
X

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி திருநெல்வேலி மாவட்ட எல்லையான உத்தமபாண்டியன்குளத்திற்கு இன்று (03.02.2022) வந்தது.

அப்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்