தாமிரபரணி நதி மாபெரும் தூய்மை படுத்தும் பணி-மாவட்டஆட்சியர் தகவல்

தாமிரபரணி நதி மாபெரும் தூய்மை படுத்தும் பணி-மாவட்டஆட்சியர் தகவல்
X
பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி நதியினை தூய்மை படுத்தும் பணி 23.04.2022 அன்று நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி நதி மாபெரும் தூய்மை படுத்தும் பணி 23.04.2022 அன்று நடைபெற உள்ளது மாவட்டஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதியினை தூய்மை படுத்தும் பணி 23.04.2022 அன்று நடைபெறவுள்ளது. பாபநாசம் முதல் சிவலப்பேரி வரை மாபெரும் தூய்மைப்பணி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ள உள்ளனர் அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் முதல் ஆலடியூர் பகுதி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அலுவலர்கள் படகு மூலமாக ஆற்றில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவத்ததாவது நம் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இந்த தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளது. தாமிரபரணியை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களும் முழு ஆதரவு தரவேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 'தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" என்பதை வலியுறுத்தி தாமிரபரணி நதியினை தூய்மைப்படுத்தும் பணி 23.04.2022 மிகப்பெரிய அளவில் (Mega Mass Cleaning Programme) நடைபெறவுள்ளது.

பாபநாசம் முதல் சீவலப்பேரி வரையில் 59 வழித்தடங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலமாக இத்தூய்மை பணி நடைபெறவுள்ளது. பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், கோபாலசமுத்திரம் சேரன்மகாதேவி, பத்தமடை, கொண்டாநகரம், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை மற்றும் மணிமூர்த்திஸ்வரம் ஆகிய பகுதிகளில் பொருநையின் மேன்மையை குறித்து இந்நதியின் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் கலைநிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக போட்டிகள் ஆகியவைகளை நடத்தப்படவுள்ளது.

பிளாஸ்டிக் பைகளால் தாமிரபரணி நதி மாசுப்படுவதை எடுத்துரைக்கவும், பிளாஸ்டிக் பைகளை உபயோகத்தை தவிர்ப்பதை வலியுறுத்தியும் முதலமைச்சரின் 'மஞ்சள் பை" இயக்கத்தின் மூலமாக தாமிரபரணி நதியோர கிராமங்களில் வீடுதோறும் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்படவுள்ளன. இந்த மெகா தூய்மைப்பணியில் பொதுமக்கள் பெருமளவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.

அன்றையதினம் அகஸ்தியர் காணி குடியிருப்புப் பகுதியில் காணி இனப்பழங்குடியினர் மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம் என உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்வே.விஷ்ணு தலைமையில் எடுக்கவுள்ளனர்.

இக்கூட்டத்தில் திட்டஇயக்குநர் ஊரகவளர்ச்சித்துறை பழனி,கோட்டாச்சியர் சந்திரசேகர், கோட்டாச்சியர் சேரன்மகாதேவி சிந்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், வட்டாட்சியர்கள் செல்வம் (பேரிடர் மேலாண்மை),உட்பட அரசு அலுவலர்கள், தன்னார்வளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare