நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது

நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது
X
திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை சார்பில், நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது வழங்கி பாராட்டினர்.

முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் பல்லாண்டுகளாக தமிழ்ப்பணி, சமுதாயப் பணி, கல்விப்பணி என்று பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு பணியாற்றி வருகிறார். கடந்த கொரோனா காலத்தில் முதல் அலையில் அறுபத்தி மூன்று நாட்கள் தினமும் 30 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரமும், இரண்டாவது அலையில் 55 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், செய்து 2 மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர்.


வாக்காளர் விழிப்புணர்வு, நுகர்வோர் விழிப்புணர்வு, நூலக வளர்ச்சி, ஏழைப் பெண்கள் இலவச திருமண உதவி ,கல்வி உதவி, துயருற்றவருக்கு உதவி, இளைஞர் முன்னேற்றம், என பல தளங்களில் பணியாற்றி வருவதை முன்னிட்டு திருநெல்வேலி திருவள்ளுவர் கழகம் மூன்றாவது ஆண்டு விழாவில் சேவைச் செம்மல் விருது அளித்து பாராட்டி இருக்கின்றது.

விழாவிற்கு திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் ந.ஜெயபாலன் தலைமை தாங்கினார். விருதினை பொருநை இலக்கிய வட்ட புரவலர் பொருநை நாதன் வழங்கினார். ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் பேராசிரியர் க.மாரியப்பன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்வில் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி, கவிஞர் சக்தி வேலாயுதம், கவிஞர் செ.ச.பிரபு, கவிஞர்.சு.முத்துசாமி நூலகர் முனைவர் பாலசுப்பிரமணியன், உக்கிரன் கோட்டை மணி மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்