சொத்துவரி விலை உயர்வை திரும்பப் பெற வழியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

சொத்துவரி மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வழியுருத்தி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக சொத்துவரி மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வழியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜவுளி காதர், பேட்டை முஸ்தபா, ஹயாத் முகம்மது,மின்னதுல்லா,ரினோஷா ஆலிமா முன்னிலை வகித்தனர்
மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,எஸ்டிடியூ மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா கண்டன உரை ஆற்றினர்
மாவட்ட தலைவர் உரையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரி 25 முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
நியாயமற்ற முறையில் மக்களிடமிருந்து வரிகளை பிடுங்குவது ஒரு நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல!தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 600 சதுர அடிக்கு குறைவான உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடு மற்றும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
அதேபோன்று, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 விழுக்காடும், 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும், 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150 விழுக்காடும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளின் பெயரில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு அவற்றின் பரப்பளவிற்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமற்ற முறையில் மக்களிடமிருந்து வரிகளை பிடுங்குவது ஒரு நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல. இந்த சொத்துவரி உயர்வை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான வாடகை மிக அதிகமாக இருக்கும் சூழலில், இந்த அதிகரிக்கப்பட்ட சொத்துவரி உயர்வால் வாடகை வீட்டில் வசிப்பவர்களே பெரும் அளவில் பாதிக்கப்படுவர். ஏற்கனவே, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடும் சிரமங்களை சந்தித்து வரும் ஏழை நடுத்தர மக்களுக்கு இந்த சொத்துவரி உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் மக்களின் ஆதரவுடன் ஆளும் திமுக அரசு வெற்றிபெற்ற பின்னர், இந்த சொத்து வரி உயர்வை அறிவித்திருப்பது மக்களை முதுகில் குத்தும் செயலாகும்.
ஆகவே, தமிழக அரசு அநியாயமான முறையில் உயர்த்தி அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு இந்த கூடுதல் வரி உயர்வை திரும்பப் பெறாவிட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன, தொகுதி செயலாளர் சிந்தா, துணை செயலாளர் இத்ரீஸ், துணை தலைவர் ஹைதர்இமாம், பகுதி, வார்டு நிர்வாகிகள் உட்பட கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu