வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருநெல்வேலி மாவட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600ஃ- வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். SC/SCA/ST பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும்,BC/BCM/MBC/OC பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000ஃ- (எழுபத்திரண்டாயிரத்துக்கு) மிகாமல் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவுபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுஉச்சவரம்பு, வருமானஉச்சவரம்பு ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000ஃ- வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவஃமாணவியர்,பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாளஅட்டை(பழையது), மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online Printout, போன்றவற்றுடன் அலுவலக வேலைநாட்களில் திருநெல்வேலி மாவட்டவேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகைபுரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in Downloadable
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu