நெல்லை, தென்காசியில் பரவலான கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை, தென்காசியில் பரவலான கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது

கோடை மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த கட்ட பயிரிடலுக்கான பணிகளை தொடங்கி உள்ளனர்.

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்தது.

நெல்லையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியில் தச்சநல்லூர், டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலியில் 1 மில்லி மீட்டரும் பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


மாவட்டத்தில் அம்பை, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, ஆலடியூர், வாகைகுளம் உள்ளிட்ட இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான காற்றும் வீசியது.

அணை பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை மழை பெய்யவில்லை. அதே நேரத்தில் வானம் இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து கோடை மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த கட்ட பயிரிடலுக்கான பணிகளை தொடங்கி உள்ளனர்.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நின்றுவிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாததால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil