தமிழக முதல்வரின் வரலாற்றைக் கூறும் "தி திராவிடன் ஸ்டாக்" நூல் வெளியீடு

தமிழக முதல்வரின் வரலாற்றைக் கூறும்  தி திராவிடன் ஸ்டாக்  நூல் வெளியீடு
X
இந்நூல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணத்தையும் அவர் கடந்து வந்த போராட்டங்களையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர், முனைவர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "THE DRAVIDIAN STOCK" என்ற ஆங்கில நூலை எம்.ஜே.பி பதிப்பகம் பதிப்பித்து வெளிட்டது. இந்நூல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணத்தையும் அவர் கடந்து வந்த போராட்டங்களையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.


இந்த புத்தகத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல்வகாப் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.பிரபாகரன், நெல்லை மேயர் P.M.சரவணன், துணை மேயர் K.R. ராஜீ, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் J.செல்வ சூடாமணி, K. தவசிராஜன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் சங்கர லிங்கம் ஆகியோர் இந்த நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர். வருகை தந்த அனைவருக்கும் நூலாசிரியர் ப.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா