நெல்லையில் இன்று சித்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை பெட்டகம் அறிமுகம்..

திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் இணைந்து வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ரூபாய் 100 ரூபாய்க்கான சித்த மூலிகை பெட்டகம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் குரல் வைரஸ் மற்றும் பல்வேறு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மாநகராட்சி மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு இணைந்து நோய் எதிர்ப்பு சக்தி தரும் 100 ரூபாய்க்கான சித்த மூலிகை பெட்டகம் வழங்குகின்றது.
மாநகரப் பகுதியில் சுற்றுச்சூழலை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டு நமது அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் சித்த மருத்துவர்கள் இணைந்து வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை பெட்டகத்தில் கபசுரக் குடிநீர் , நிலவேம்பு குடிநீர், தாளிசாதி, திரிபலாதி ,அஸ்வகந்தா மாத்திரைகள் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் போன்ற ஆறு வகையான மூலிகை பொருட்கள் அடங்கியுள்ளது.
இந்த மூலிகை பெட்டகம் ஆனது திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மூலிகை பெட்டகத்தை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகள்இ சித்த மருத்துவர் ராஜ்கபூரின் ஏஜென்சிஸ்இ வேல்முருகன்இ ஆகியோர் ஏற்பாட்டின்படி 900 3777 . 8760 7777 57. 98 65 255545 ஆகிய கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு டோர் டெலிவரி வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
சித்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை பெட்டகத்தை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழுமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu