நீதிமன்றம் அருகே வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை

நீதிமன்றம் அருகே வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை
X
நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.

நெல்லை பாளையங்கோட்டை தூத்துக்குடி சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே தனியார் பள்ளி மைதானத்தில் இன்று 25 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் முகத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை கவனித்த பொதுமக்கள் பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் பாளையங்கோட்டை எம்கேபி நகரைச் சேர்ந்த மகாராஜன் (எ) கட்ட மகராஜன் என்பது தெரியவந்துள்ளது. இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நகராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்ட நீதிமன்றம் அருகிலேயே வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!