தொடரும் காப்பர் திருட்டு! காற்றாலைகளை குறிவைக்கும் திருடர்கள்!
காற்றாலையில் சூப்பர் வைசராக இருந்துவரும் ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காப்பர் வயர் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே தனியார் காற்றாலையில் காப்பர் வயர் திருடியதாக சூப்பர்வைசர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகே அமைந்துள்ளது மேட்டுப்பிராஞ்சேரி - வெண்கலப்பொட்டல் சாலை. இந்த சாலையில் எண்ணற்ற காற்றாலைகள் இயங்கி வருகின்றன. பொதுவாக காற்றாலைகளுக்கு வாட்ச்மேன் ஒருவரும், பல காற்றாலைகளுக்கு சேர்த்து ஒரு சூப்பர்வைசரும் இருப்பார். அந்த வகையில் குறிப்பிட்ட காற்றாலைக்கு மணியாச்சி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
அவரின் கீழ் இயங்கி வரும் காற்றாலைகளை மேற்பார்வையிட்டு அங்கு பணிகள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பது உள்ளிட்ட மேற்பார்வை பணிகளை அவர் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 25ம் தேதி காற்றாலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ரமேஷின் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சில காப்பர் வயர்கள் களவு போயிருப்பதைக் கண்டறிந்துள்ளார். காப்பர் வயர்கள் காணாமல் போயிருந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் உடனடியாக மேலிடத்துக்கு தகவல் கொடுக்கவே, அவர்களின் ஆலோசனையின்படி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
கங்கைகொண்டான் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்த ரமேஷ், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். ரமேஷின் புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், இதில் உடனடியாக விசாரணைக்கு இறங்கினர். விசாரணையில் 33 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்து அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கயத்தாறு அய்யனார் ஊத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திதான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu