எழுத்தாளர் எஸ்.எம்.ஜேம்ஸ்கோயில்ராஜ் எழுதிய பாளை நினைவுகள் நூல் அறிமுக விழா
எழுத்தாளர் எஸ்.எம்.ஜேம்ஸ் கோயில் ராஜ் எழுதிய "பாளை நினைவுகள்" நூல் அறிமுக விழா பாளை. சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர், கல்வியாளர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர். ஜெயமேரி. முன்னிலை வகித்தார். தொடக்கவுரையை தாளாளர் மற்றும் முன்னாள் கல்வி அலுவலர். கலைச்செல்வி. வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வட்டாட்சியர் செல்வன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா நோக்கம் பற்றி பாரதி முத்தமிழ் மன்றம் தலைவர்,கவிஞர் புத்தனேரி.கோ. செல்லப்பா பேசினார்.
நூல் அறிமுகவுரை எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன். முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன். கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி. ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
வாழ்த்துரை நல்நுாலகர் முத்துகிருஷ்ணன், கவிஞர் சு.முத்துசாமி, கவிஞர்.பிரிட்டோ அலெக்ஸாண்டர், உதவி ஆய்வாளர். தளவாய் மாடசாமி, திருக்குறள் இரா .முருகன், பேராசிரியர் ஹரிஹரன், கவிஞர் உக்கிரன்கோட்டை மணி, கவிஞர் தச்சை மணி ,கவிஞர் பிரபு, ஆசிரியர் சரவணகுமார், ஆசிரியர் பாக்கியநாதன், கவிஞர் முத்துவேல், செல்வராணி, கமல லியோனா எழுத்தாளர் மு.வெ.ரா. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூலாசிரியர்.எஸ்.எம்.ஜேம்ஸ் கோயில் ராஜ் ஏற்புரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu