உலக புகையிலை தினம்.: ஷிபா மருத்துவமனை சார்பில் கையெழுத்து பிரசாரம் இயக்கம்

உலக புகையிலை தினம்.: ஷிபா மருத்துவமனை சார்பில் கையெழுத்து பிரசாரம்  இயக்கம்
X

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனை சார்பில்  நடைபெற்ற வாகன கையெழுத்து இயக்கம்

வண்ணார்பேட்டையில் உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனை சார்பில் வாகன கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம்

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனை சார்பில் வாகன கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹாஜி முகம்மது ஹாபி தலைமை வகித்தார். கையெழுத்து பிரசார நிகழ்ச்சியை விவேகானந்தன் காவல் உதவி ஆணையர் தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் மருத்துவர் டாக்டர்.தெய்வநாயகம் மற்றும் டாக்டர்.முகம்மது இப்ராகிம் உலக புகையிலை எதிர்ப்பு தின செய்தியை பற்றி கூறினார்கள். ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர்.அகமது யூசுப், டாக்டர்.பாலா, டாக்டர். ஸ்டேன்லி ஜோசப் மற்றும் செவிலியர்கள், ஹிபா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவ இயக்குநர் டாக்டர்.முகம்மது அரபாத் நன்றி கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil