நெல்லையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் உலக கால்நடை தினத்தை முன்னிட்டு அனைத்து துறை கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கால்நடைத்துறை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி.

உலக கால்நடை தினத்தை முன்னிட்டு அனைத்து துறை கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. கால்நடைத்துறை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமை அன்று உலக கால்நடை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் உலக கால்நடை தினம், கால்நடை பின்னடைவை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளை முன் வைத்து கொண்டாடப்படுகிறது. விலங்குகள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்காக கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கால் நடை மருத்துவர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படும் விதம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல்லை மண்டல வன பாதுகாவலர் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார், கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி மாவட்ட அறிவியல் மையம், பிஎஸ்என்எல் வழியாக வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை வரை சென்றது. பேரணியின்போது கால்நடைத்துறை மூலம் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கால்நடை துறையில் அறிவியல் ரீதியான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி கண்டது குறித்தும், பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!