நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு காெடுக்க திரண்டு வந்த பெண்கள்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கவும், கூலி ரூ 300 வழங்கிடவும் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

சிங்கிகுளம் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான வேலையும், ஊதிய 300 ரூபாய் வழங்ககோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பெண்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 100 நாட்களுக்கு பதிலாக வெறும் 20 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படுவதாகவும், அதிலும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்ப திரண்டனர்.

இது குறித்து பெண்கள் கூறும்போது:- நாங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு வெறும் 20 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படுகிறது. அதிலும் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. நாங்கள் காலை 6 மணிக்கு சென்றால் இரவு 7 மணி வரை பணிபுரிந்து வருகிறோம். எனவே தங்களுக்கு 100 நாட்களும் வேலை வேண்டும் கூலி 300 ரூபாய் தரவேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை. அதை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil