நடனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நடனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பாளையங்கோட்டையில் நடனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஏப்ரல் 6 வாக்களிக்க மறவாதீர் என,டிஜே ஃபிளையர்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்களின் நடனம் மூலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை, தெற்கு பஜார் அருகே லூர்து நாதன் சிலை முன்பு நடைபெற்றது.இந்த நிகழ்வில் டிஜே ஃபிளையர்ஸ் அகாடமி மாணவர்கள் இது உங்க உரிமை, உங்க கடமை, ஓட்டு போடுங்க என்ற விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடினர். நடனம் மூலம் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் மேஜர் டோனர் மயில் T. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கலந்து கொண்டார்.

மேலும் இதில் டெபுடி தாசில்தார் பழனி , தமிழாசிரியர் கவிஞர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் நூலகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர்கள் அனைவரும் உரிமையையும், ஜனநாயக கடமையையும் தவறாது செய்ய வேண்டும் என வாக்காளர்களுக்கு பல தகவல்களை கூறி, தேர்தல் ஆணைய அரசு விழிப்புணர்வு நோட்டீஸை பொதுமக்களுக்கு வழங்கினர்.இந்த நிகழ்வில் டிஜே ஃபிளையர்ஸ் அகாடமி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!