வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை நெல்லையில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சிதம்பரனார் முழு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தினர். நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் முன்னாள் அமைச்சரும், கழக மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, பாளையங்கோட்டை மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சிவந்தி மகாராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!