திருநெல்வேலியில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
நெல்லை மாநகர மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
நெல்லையில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 2.43 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக வெளிச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க மாநகர மதுவிலக்கு போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக அவ்வபோது போலீசாரால் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மதுபானங்கள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில் நெல்லை மாநகர மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
இதுதொடர்பாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நடைபெற்ற ஏலத்தில் பலர் பங்கேற்றனர். இதில் இரண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கார் ஒன்று 74,340 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஆறு வாகனமும் சேர்த்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் போனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu