நெல்லை-அரசு அருங்காட்சியத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு கண்காட்சி.
![நெல்லை-அரசு அருங்காட்சியத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு கண்காட்சி. நெல்லை-அரசு அருங்காட்சியத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு கண்காட்சி.](https://www.nativenews.in/h-upload/2021/08/09/1228211-img-20210809-wa0047.webp)
காட்சிபடுத்தப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாள்கள்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் மற்றும் சுருள் வாள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை.
அத்துணை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும்.
ஒரு மாதம் முழுவதும் இந்த பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் முக்கியத்துவத்தை நெல்லை மாவட்ட மக்களிடையே எடுத்து செல்வதற்கான ஒரு முயற்சி தான் இந்த சிறப்பு கண்காட்சி.
இன்று துவங்கப்பட்ட இக்கண்காட்சியில் இடம்பெற்ற அரும்பொருள்கள் வெள்ளையனை வேரறுக்க வீறு கொண்ட வேங்கையாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் மற்றும் சுருள்வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நமது முன்னோர் தனது இன்னுயிரை நீக்கி போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் மிக முக்கியமான கடமையாகும்.
அவர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருள்களை பார்க்கும் பொழுது நமது முன்னோர்களின் வீரத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என இக் கண்காட்சியை துவங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.
இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பலர் பார்வையிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu