வீடு புகுந்து திருட முயற்சித்த இருவர் கைது
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (59) என்பவர், மும்பையில் வசித்து வரும் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வாஞ்சிநாதன் நகர் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார். முத்துராஜ் தற்போது அதே பகுதியில் இருக்கும் அவரது சொந்த வீட்டிற்கு வந்துவிட்டார். இருப்பினும் பழைய வீட்டின் உரிமையாளர் செல்லத்துரை வெளியூரில் இருப்பதால் வீட்டை கவனித்து வருகிறார்.
13.3.2021 அன்று காலை முத்துராஜ் வாடகை வீட்டை சென்று பார்க்கும்போது கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு,பீரோ திறக்கப்பட்டு இருந்தது வீட்டில் யாரும் இல்லாததால் பொருள் எதுவும் இல்லை களவு ஏற்படவும் இல்லை. பின் முத்துராஜ் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பொன்னாகுடி காமராஜ் காலனி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்ற மெட்ராஸ் முருகன் (42), என்பது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும் இதே போல் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (44) என்பவர் பொன்னாகுடி வாஞ்சிநாதன் நகர் பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விடாமல் வாரத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவார். கடந்த 18.03.2021 அன்று வீட்டை சுத்தம் செய்து பூட்டிவிட்டு வந்துள்ளார். பின் 25.03.2021 அன்று வீட்டை பார்க்கும் போது கதவு உடைக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்துள்ளது. களவு ஏற்படவில்லை. பின் பாலசுப்ரமணியன் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் விசாரணை மேற்கொண்டதில் பாலசுப்பிரமணியன் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது பொன்னாகுடி காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த மணி(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் மணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu